ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் திறமையானவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் முதல் எடிஷனின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தமிழின் முன்னணி பொழுதுபோக்குச் சேனலான (ஜிஇசி) – ஜீ தமிழ் இன்னும் பெரிதாகப், பிரம்மாண்டமாக, ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் எடிஷனை வழங்க உள்ளது. சந்தையில் முன்னணி தொலைக்காட்சியாகத் திகழ்வதற்கு உதவும் வகையில் உறுதுணையாக இருந்த திறமையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் தெற்கு களஸ்டர் தலைவர் சிஜு பிரபாகரன், ஜீ தமிழ் புரோக்கிராமிங்க் தலைவர் தமிழ்தாசன், நடிகை பிரியா ராமன், நடிகை ஸ்ரீகுமார், தொகுப்பாளினி அர்ச்சனா, தொகுப்பாளர் தீபக், பாடகர் ஸ்ரீநிவாஸ், நடிகை ரச்சிதா, நடிகை அஸ்வினி, நடிகை புவி, நடிகை ரேஷ்மா, நடிகை ஆயிஷா ஆகியோர் முனிலையில் நடப்பு ஆண்டு விருதுகளுக்கான கோப்பைகளும், பிரிவுகளும் அறிவிக்கப்பட்டன.

செம்பருத்தி, யாரடி நீ மோகினி, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, பூவே பூச்சூடவா, சத்யா, நாச்சியார்புரம் உள்ளிட்ட தொடர்கள் மற்றும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், ச ரி க ம ப, டான்ஸ் ஜோடி டான்ஸ், சூப்பர் மாம், ஜில் ஜங்க் ஜக், தமிழா தமிழா, ஜீன்ஸ் உள்ளிட்ட தொடர் அல்லாத நிகழ்ச்சிகள் மூலம் பெஞ்ச்மார்க் அளவுகோள்களை ஏற்படுத்திய பொது பொழுதுபோக்குத் துறையில் முன்னணி வகிக்கும் ஜீ தமிழ் சேனல் வெற்றிப் பயணத்தைக் கொண்டாடுவதே ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் நோக்கமாகும். ஜி தமிழ்க் குடும்பம் ஒன்றிணைந்து பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த திறமைசாலிகள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர். சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்கத்தில் 2019 அக்டோபர் 6 அன்று நடைபெற உள்ள வண்ணமிகு நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

குடும்பம் விருதுகள் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் தெற்கு களஸ்டர் தலைவர் சிஜு பிரபாகரன் பேசுகையில் ‘கடந்த பத்தாண்டுகளாக ஜீ தமிழ் புத்தம் புதிய மற்றும் தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. நேயர்களுடன் நாம் கொண்டிருக்கும் நல்ல உறவும், நமது நிகழ்ச்சிகளில் காணப்படும் தமிழ்ப் பெருமை மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பே சந்தையில் கிடைத்துள்ள விரிவான அங்கீகாரத்துக்கான முக்கியக் காரணங்களாகும். அனைத்து வயதுப் பிரிவினருக்கும் பிடித்தமான பொழுதுபோக்குச் சேனலாக ஜீ தமிழ் தொலைக்காட்சி உருவாக உதவிய திறமைசாலிகளை ஜீ தமிழ் குடும்ப விருதுகள் மூலம் கௌரவப்படுத்துவதுகிறோம்’ என்றார்.

2019 ஜீ தமிழ் குடும்பம் விருதுகளுக்கான பிரிவுகள் பின்வருமாறு: சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொகுப்பாளர், சிறந்த தொகுப்பாளி, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த வில்லி, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகை, சிறந்த ஆண் நடுவர், சிறந்த பெண் நடுவர், பிரபல மருமகள், பிரபல மாமியார், சிறந்த வளரும் நடிகர், சிறந்த வளரும் நடிகை, பிரபல அப்பா, பிரபல அம்மா, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, வளரும் தொகுப்பாளர், வளரும் தொகுப்பாளி, பிடித்தமான கதாநாயகன், பிடித்தமான கதாநாயகி, சின்னத்திரை சிறந்த ஜோடி, பிடித்தமான வில்லி, பிடித்தமான தொகுப்பாளர், பிடித்தமான தொகுப்பாளி, பிடித்த தொடர் மற்றும் சிறப்பு விருதுகள்.

அனைத்து நேயர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குச் சம்மந்தப்பட்ட எண்களுக்கு மிஸ்ட் கால் தருவதன் மூலம் அல்லது ஜீ5 செயலி / வலைதளத்திலுள்ள ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் மைக்ரோசைட்டில் வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். கூடுதலாக, செப்டம்பர் 18 தொடங்கி சேலம், திண்டுக்கல், கடலூர், தேனி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, பாண்டிச்சேரி, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்குப் பயணிக்கும் ஜீ தமிழ் கேண்டர் வாகனங்களிலும் நேரடியாக வாக்களித்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

‘பிடித்தமான’ பிரிவுகளில், மிஸ்ட் கால், ஜீ5 மற்றும் கேண்டர் மூலம் பதிவான வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். மற்ற பிரிவுகளுக்கு ஜீ5 மற்றும் கேண்டர் மூலம் திரட்டப்பட்ட வாக்குகள் மூலம் மட்டுமே இறுதி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் திறமையானவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தல்

  1. Pingback: wyld gummies store
  2. Pingback: keltec ksg
  3. Pingback: 789sexy
  4. Pingback: important source

Comments are closed.