
IT மற்றும் கேமிங் உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம், மொபைல்/லைஃப் ஸ்டைல் ஆக்சஸரீஸ் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகளில் இந்தியாவின் முன்னணி பிராண்டான ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் உள்ள VR சென்னை தனது நான்காவது பிரத்யேக கடையைத் திறந்துள்ளது.
முதன் முதலாக சென்னை ஃபோரம் விஜயா மாலில்தனது பயணத்தைத் தொடங்கியது ஜெப்ரானிக்ஸ், அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ், ஜெய்பூரில் உள்ள கவ்ரவ் டவர்ஸ் மாலில் திறக்கப்பட்ட கடைகளின் வெற்றிக்கு பின் இந்தக் கடை திறக்கப்பட்டுள்ளது. மக்களின் பிராண்டாக அறியப்படும் ஜெப்ரானிக்ஸ், வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான அதிக வழிகள் மற்றும் அனுபவத்துடன் கூடிய ஷாப்பிங்கை வழங்குவதற்கு மற்றொரு பிரத்தியேககடையை அமைக்க உள்ளது. இன்னும் சிறந்த முறையில் வாடிக்கையாளர்களை அடைய இது உதவும்.
பல்வேறு வகையான தயாரிப்புகளை மக்களுக்கு வழங்கும் இந்த பிராண்டு, 82 விருதுகளுடனும் ஆற்றல்மிக்க பிராண்டு தூதரான ஹிருத்திக் ரோஷன் அவர்களுடனும் ஸ்டைல், நிபுணத்துவம் மற்றும் ஆளுமைக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறது.
தமிழ் திரைப்பட நட்சத்திரம் திரு. ஜி.வி பிரகாஷ் இந்தப் பிரத்தியேக கடையைத் திறந்து வைத்தார். “ஜெப்ரானிக்ஸ் ஒரு பிராண்டாக பணத்திற்கு ஏற்ற பொருளைத் தேடும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் எண்ணற்ற விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதனைத் தவிர்த்து, ஆடியோ தொடர்பான தயாரிப்புகளில் எதிர்பார்த்த அளவிலான தீர்வு கிடைக்கிறது, மேலும் செயல்திறன், ஒலி மற்றும் உபகரணங்களை அழகாக வடிவமைப்பதில் அவர்கள் எப்போதும் முன்னிலையில் உள்ளனர்.”என்றார்.
திறப்பு விழாவில், ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி பேசுகையில், ‘சென்னையில்தான் எங்களின் முதல் பிரத்தியேக கடையைத் தொடங்கினோம், வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்த ஊக்கம் மற்றும் ஆதரவுக்குப் பிறகு, எங்கள் இரண்டாவது கடையை இங்கு திறப்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஒரு பிராண்டாக, எங்களிடம் அதிக அளவிலான தயாரிப்பு வரம்பு உள்ளது, உண்மை என்னவென்றால், எங்கள் கூட்டாளர்களால் எங்கள் முழு வரம்பில் 20% கூட காட்ட முடியாது. எனினும் ரீடெயில் கடைகள் எங்கள் திட்டத்தைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வைத் தருவதோடு அனுபவத்துடன் கூடிய ஷாப்பிங் மற்றும் எங்கள் விநியோகஸ்தர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது. செயல்பாடு, வடிவம் மற்றும் சிறப்புத்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து புதிய பொருட்களை நாங்கள் உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் முக்கியமான நோக்கமாகும்.
மேலும் திரு தோஷி, “எங்களின் முக்கிய நோக்கம் பிராண்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் உருவாக்குவதுதான், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற ரீடெயில் கடைகளைத் திறக்க விரும்புகிறோம்”. என்று கூறினார்.
மீடியா தொடர்பான மேலும் கேள்விகளுக்குத் தொடர்பு கொள்க:
கோமல்: 7338777923
pr@zebronics.com
6 thoughts on “ஜெப்ரானிக்ஸின் மற்றொரு புதிய கடை இப்போது சென்னையில்”
Comments are closed.