யமஹாவின் புதிய அறிமுகம் MT-15 in BS VI

~ புதிய MT-15 in BS VIஇன் பின்புறத்தில் ரேடியல் டயர் இருக்கும்

~ இத்துடன் கூட இந்தியாவில் முதன்முறையாக புத்தம்புதிய வண்ணமயமான ஐஸ் ஃப்ளூகோ வெர்மில்லியான் அறிமுகமாகிறது

சென்னை, டிசம்பர் 19, 2019: ‘யமஹாவுக்கே உரிய தனித்துவத்தை’ பல்வேறு தயாரிப்புக்கள் மற்றும் அனுபவங்கள் மூலம் உணர்த்திய ‘தி கால் ஆஃப் தி ஃப்ளூ’ தந்த ஆச்சர்யத்தை தொடரும் வகையில் இந்தியா யமஹா மோட்டார் (IYM) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான BS VI எஞ்ஜின் மூலம் உந்தப்படும் MT-15 (150 cc) மோட்டார் சைக்கிளை சீக்கிரமே சந்தையில் கொண்டுவரப்போவதாக இன்று அறிவித்தது. இத்துடன் தனது தனித்துவம் வாய்ந்த தோற்றத்தால் பல்வேறு நாடுகளில் அற்புதமான விமர்சனங்களைப் பெற்றுள்ள சிறப்பு வண்ணத்துடன் கூடிய “ஐஸ் ஃப்ளூகோ வெர்மில்லியானும்” அறிமுகமாக உள்ளது. புதிய BS VI MT-15 வாகனம் MT-15இல் தரப்படுத்தப்பட்ட பின்புற ரேடியல் டயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘முடுக்கு விசை, வேகம்’ ஆகியவற்றை வெளிப்படுத்தும் இதன் மேம்பட்ட டிசைனானது சிக்கனமான தோற்றம், பிரமிப்பூட்டும் ஹெட்லைட், சிறிய பின்விளக்கு மற்றும் MTஇன் பாணியைத் துல்லியமாக வெளிக்காட்டும் ஒட்டுமொத்த இறுதி வேலைகள் ஆகியவற்றால் இன்னும் பிரபலமாகிறது.

துரித வேகத்துக்கு உதவும் VVA எஞ்சினுடன் கூடிய புதிய MT-15 வாகனத்தில் ஒவ்வொரு பாணிக்கும் உகந்த ECU, நகரில் உற்சாகம் நகர்வலம் போகத் தேவையான அதிகரிக்கப்பட்ட இரண்டாம் கியர் விகிதம், கியர்-ஷிஃப்ட்டுகளை அழுத்தமின்றிப் பயன்படுத்தத் தேவையான A&S க்ளட்ச், நேர்த்தியான அவுட்லஒனைக் கொண்ட, சுதந்திரத்துடன் கூடிய இறுக்கமான, நேர்த்தியான அவுட்-லைன், மோட்டாரில் ஓடுவது போல அருமையான நிறுத்தும் சக்தியை உடைய, 282 மிமீ முன்புற டிஸ்க் ப்ரேக் மற்றும் ஒற்றை சேனல் ABS ஆகியவை இதில் அடங்கும். ‘முடுக்கு விசை, வேகம்’ ஆகியவற்றை வெளிப்படுத்தும் இதன் மேம்பட்ட டிசைனானது அருமையான முன்புறத்திற்கு அழகூட்டும் ஹெட்லைட், சிறுஅளவிலான பின்புறம், அத்துடன் செங்குத்தான ஒரு பின்விளக்கு மற்றும் என்னவென்றே விவரிக்க முடியாத ‘MT’யைக் காட்டும் ஒட்டுமொத்த கிராபிக்ஸ் ஃபினிஷ் அடங்கியவற்றுடன் இன்னமும் மிளிர்கிறது.

இன்று இதை அறிமுகப்படுத்த சென்னையில் நடந்த விழாவின்போது யமஹா மோட்டர் இந்திய நிறுவனங்களின் சேர்மன் திரு மோடோஃபுமி ஷிதாரா பேசுகையில் “2020க்கான யமஹாவின் வியூகம் ’த கால் ஆஃப் த ப்ளூ’ திசையை நோக்கிய திசையில் மிகத் தெளிவாக இருக்கிறது. ஐஸ் ஃப்ளூகோ வெர்மில்லியான்’ மற்றும் சாலைகளில் அதிவேகத்தைத் தரும் பின்புற ரேடியல் டயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு பொதுவாக மோட்டார் சைக்கிள்களில் உள்ள MT ஆர்வமானது வேறொரு கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மக்களிடையே ரேஸ் பற்றிய ஆர்வத்தையும் வசதி, உகந்த சூழல், யமஹா நீலத்தின் சின்னம் போன்றவற்றை வளர்க்கும் நோக்கத்தோடு யமஹாவின் புதிய ‘ப்ளூ ஸ்கொயர்’ விற்பனை நிலையத்தில் இந்த ஆர்வமூட்டும் யமஹா மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம். தனது ப்ராண்ட் வியுகமான ‘த கால் ஆஃப் த ப்ளூ’வை உற்பத்திப் பொருட்களுக்கான வியூகம் மற்றும் நெட்வொர்க்குடன் 2020ஆம் ஆண்டில் பெரிய அளவில் விரிவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் உதயமான ‘ப்ளூ ஸ்கொயர்’ விற்பனை நிலையம் போன்று மேலும் 100 விற்பனை நிலையங்களை 2020ஆம் ஆண்டுக்குள் திறந்து இந்த 125-CC பிராண்டுக்கான வாகனச் சந்தை மற்றும் விளையாட்டு வாகனங்களுக்கான சந்தையை மேலும் நிலைநிறுத்தத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ‘த கால் ஆஃப் த ப்ளூ’வானது 2020இல் மேன்மேலும் பெருகி ஆர்வத்தைத் தூண்டி பல்வேறு தரப்பினரான எமது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டைலான அனுபவம் தரும்படி வளரும்,” என்றார்.

யமஹா மோட்டார் இந்தியா குரூப் ஆப் கம்பெனீஸ் பற்றி

யமஹா மோட்டர், 1985ல் இந்தியாவிற்குள் ஒரு கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்டது, ஆகஸ்ட் 2001ல், அது யமஹா மோட்டார் கோ., லிமிடெட் ஜப்பான் (YMC) -ன் 100% கிளை நிறுவனமாக மாறியது. 2008ல்,
YMC உடன் Mitsui & Co., Ltd. கூட்டு-முதலீட்டாளராக இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் (ஐஒய்எம்) (India Yamaha Motor Private Limited (IYM)) மாற ஒப்பந்தம் இட்டது. ஃபரிதாபாத்(ஹரியானா),சுராஜ்பூர்(உத்திரப்பிரதேசம்) மற்றும் சென்னை (தமிழ்நாடு) ஆகிய 3 இடங்களில் ஐஒய்எம்-ற்கு உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

இந்த தொழிற்சாலைகளின் உட்கட்டமைப்பு மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கான பாகங்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

YMC அதன் கிளை நிறுவனங்களை நிறுவியுள்ளது, அவை பின்வருமாறு- யமஹா மோட்டார் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட் இந்தியா பிரைவேட்லிமிடெட் (YMRI), யமஹா மோட்டார் இந்தியா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் (YMIS) மற்றும் யமஹா மோட்டார் இந்தியா பிரைவேட்லிமிடெட் (YMI) இன் இந்தியா ஐஒய்எம்-ல் மேம்பாடு, விற்பனைகள்& மார்க்கெட்டிங் மற்றும் அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ மற்றும் ஒட்டுமொத்த வர்த்தக திட்டமிடல் மற்றும் பிராந்திய கட்டுப்பாடும் சுயாதீன ஆதரவு. தற்போது அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் அடங்கியுள்ளவை- ஏபிஎஸ் உடன் ஸ்போர்ட்ஸ் மாடல் ஒய்இசட்எஃப்-ஆர்3 (321சிசி), ஏபிஎஸ் உடன் ஒய்இசட்எஃப்-ஆர்15 பதிப்பு 3.0 (155சிசி), ஏபிஎஸ் உடன் எம்டி-15 (155 சிசி); ப்ளூ கோர் தொழில்நுட்பம் கொண்ட மாடல்களான ஏபிஎஸ் உள்ள எஃப்இசட் 25(249 சிசி), ஏபிஎஸ் உடன் ஃபேசர் 25 (249சிசி), ஏபிஎஸ் உடன் எஃப்இசட்- எஸ் எஃப்ஐ (எரிபொருள் செலுத்தப்பட்டது, 149 சிசி), யூபிஎஸ் உடன் சல்யூட்டோ (125சிசி) மற்றும் யுபிஎஸ் இயக்கப்பட்ட ஸ்கூட்டர்களான சிக்னஸ் ரே இசட்ஆர்(113 சிசி), ஃபேஷினோ (113சிசி), சிக்னஸ் ஆல்ஃபா(113 சிசி), சிக்னஸ் ரே இசட்(113 சிசி); சமீபத்திய சூப்பர்பைக் எம்டி-09 (847 சிசி) மற்றும் ஒய்இசட்எஃப்-ஆர்1 (998 சிசி).

Author: ADmiNIstRAtoR