சர்வதேச திருச்சபை கூட்டமைப்பு, பா.ஜ.க இனைந்து சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரானா நிவாரணம் வழங்கி வருகின்றனர்

ஏசு அன்பானவர் என்ற வாசகத்திற்கு ஏற்ப திருவான்மியூர், வள்ளுவர் நகர், செங்குன்றம், பூந்தமல்லி போன்ற இடங்களில் வசிக்கும் நரிக்குரவ இன மக்கள், பெசன்ட்நகர் மற்றும் மாங்காட்டில் வசித்து வரும் இருளர் இன மக்கள் போன்றவர்களுக்கும் தினசரி வருவாய் ஈட்டக்கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் நலிவடைந்த பத்திரிக்கையாளர்களுக்கும் சுமார் 300 பேருக்கு பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி மற்றும் இந்தியன் ஜிப்ஸி மிஷன் இணைந்து 10 நாட்களுக்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

உடன் கிறிஸ்தவ அமைப்பின் பேராயர் டாக்டர் ஆல்வின் ரோலண்ட் டிமோதி, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன், இளைஞரணியை சேர்ந்த செல்லபாண்டியன் மற்றும் மாலி என்ற சரவணன் ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

3 thoughts on “சர்வதேச திருச்சபை கூட்டமைப்பு, பா.ஜ.க இனைந்து சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரானா நிவாரணம் வழங்கி வருகின்றனர்

  1. Pingback: ratecarseat
  2. Pingback: 티비위키

Comments are closed.