இனம் இனத்தோடு சேரும் என்பது இதுதான்.. ஈவேராவோடு இருந்தால் தேற மாட்டோம் என உணர்ந்து.. அவரை விட்டு கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்துத் தந்த அண்ணாவை விட்டுவிட்டு கருணாநிதி ஈவெராவையே முன்வைத்து எங்கும் அவருக்கே சிலை வைத்ததும் பெயர் வைத்ததும் நிற்க வைத்ததும் பார்ப்பனரை ஒழிப்பதாக பேசிக்கொண்டே தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை டாக்டர் இராதகிருட்டிணன் விருது என மாற்றியதும்.. யாரும் கேட்காமலேயே அரசினர் தோட்டம் என்ற மிகப் பெரிய இடத்திற்கு ஓமந்தூரார் வளாகம் என பெயரிட்டதும் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் பெயரில் இருக்கும் ரெட்டி என்ற சாதி பெயரை நீக்காமலே விருது பெயரை வைத்திருப்பதும் ஊரில் இருந்த தெரு பெயர்களில் இருந்த சாதி பெயர்களை எல்லாம் நீக்குகிறேன் என்ற எம்சிஆர் சென்னை தியாகராய நகரில் இருக்கும் டாக்டர் நாயர் சாலை என்ற பெயரை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு வைத்ததும்.. இன்னமும் எத்தனையோ எடுத்துக் காட்டுகளை காட்டலாம். அதையெல்லாம் உணராத தமிழர்கள் நாம் தமிழரென்ற பிடிக்குள் வர மறுத்தால் எப்படி?.. திராவிடம் என்ற இருளுக்குள் இருந்தா தமிழைத் தேடுவது?
ஒரு நல்ல நாள் தமிழனென்று எவருக்காவது கொண்டாடும் வழக்கம் தமிழர் நமக்கு உணாடா..நினைத்துப் பார்ப்போம். நாடு அடிமை பட்டுக் கிடந்த போது துடித்தெழுந்து சுகம் இழந்த விடுதலை போராட்டத் தலைவர்களை விட்டுவிட்டு ஆங்கிலேயரே நம்மை ஆளட்டும் எனவும் தமிழ்நாட்டு நில பரப்புகளை ஆந்திரத்தோடு இணைக்க வேண்டும் என்ற இராதாகிருஷ்ணன் பிறந்த நாளையும் தமிழ்ப்பகுதிகள் எங்கே போனால் என்ன.. நமக்கு திராவிட நாடு வரும். அதுவரை ஓயமாட்டோம் என வெற்றுத் தனம் பேசிய ஈவேரா விடமும் தமிழர் இருப்பது தமிழா? நமக்கே அவமானம். கேடு. விடு திராவிடத்தை. வெல்ல வருக பகையழிப்பை. போற்றுக கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரத்தை! வெல்லட்டும் தமிழர் உலகத்தை!
வாழ்த்துக்கள்!
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.
6 thoughts on “இணையில்லா தமிழர் வ உ சிதம்பரனார் பிறந்த நாள் இன்று”
Comments are closed.