ஈகை இனிது அறக்கட்டளை சார்பாக தண்ணீர் பந்தல் – வழக்கறிஞர் தனசேகர்

https://youtu.be/9o8SRzwaCYw?si=_zjsTSQV_g4EFtXx

2015ம் ஆண்டு வர்தா புயலின் போது வழக்கறிஞர் தனசேகர் தலைமையிலான இளைஞர்கள் குழு களத்தில் இறங்கி இன்னலில் தத்தளித்த மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்தனர். இந்த சேவை மூலம் மக்கள் அடைந்த பயனும், அதனால் கிடைத்த மனத்திருப்தியும் அவர்களை “ஈகை இனிது” என்ற அறக்கட்டளையை தொடங்க உத்வேகமாக அமைந்தது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான உதவிகளைச் செய்து வந்த இந்த அறக்கட்டளையானது, 2023ம் ஆண்டு முதல் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளை வழங்கி வருகிறது.

தற்போது அடுத்தக்கட்டமாக பசியில் வாடுவோருக்கு உணவளிப்பது, கோடை வெப்பத்தில் தவிப்போரின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைப்பது போன்ற பணிகளில் களமிறங்கியுள்ளது. ஈகை இனிது அறக்கட்டளையை வழி நடத்தி வரும் தனசேகர் வழக்கறிஞர் ஆவார். எனவே அறக்கட்டளை சார்பில் அவர் உதவிகளை வழங்க செல்லும் இடங்களில் எல்லாம் சட்ட ரீதியிலான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் படி கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து வழக்கறிஞர் தனசேகர், ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கவும், குறைவான கட்டணத்தில் வழக்குகளை நடத்தி நியாயம் பெற்றுத்தரவும் “அட்வகேட்டர் லா அசோசியேட்ஸ்” (Advacator Law Associates) என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பானது பணவசதி இல்லாத ஏழை மக்களுக்காக வழக்கை நடத்திக்கொடுப்பது, சட்ட ரீதியிலான உதவிகளை வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வருகிறது. ஆரம்பகட்டத்தில் 3 வழக்கறிஞர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட இந்த அமைப்பானது, தற்போது 40 வழக்கறிஞர்களைக் கொண்ட மாபெரும் அமைப்பாக உருவெடுத்துள்ளது.

தற்போது அட்வகேட்டர் லா அசோசியேட்ஸ் அமைப்பானது 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களைக் கொண்டு ஏழை மக்களுக்கு வழக்குகளை நடத்தவும், வழக்குகளை தொடுக்கவும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

Author: ADmiNIstRAtoR