சென்னை, 15 டிசம்பர் 2019: மகாத்மா காந்தி கண்ட கனவான பூரண மதுவிலக்கை தங்கள் லட்சிய கொள்கையாக கொண்டுள்ள தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் அருகே கட்சியின் மாநில தலைவர் திரு.டிக்ஸன் அவர்கள் தலைமையில் 15.12.2019 அன்று மிக பிரமாண்டன முறையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு டிக்ஸன் அவர்கள் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் மதிப்பிற்குரிய திரு. ட்ராபிக் ராமசாமி அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இவ்விழாவில் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் முதல் சமூக சேவையாக வேளச்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்தனர்.
பின்னர் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்றது..
12 thoughts on “தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் திறப்பு விழா”
Comments are closed.