சென்னை: தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் திருவல்லிக்கேணி சார்பில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து குருமன்ஸ் நல உரிமை சங்க பொதுச்செயலாளர் அழகுதனா கூறுகையில்..
உலகையே கொரோனா வைரஸ் நடுங்க வைத்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில் அதனை எதிர்த்து போரிடும் களத்தில் முன்னே நிற்பவர்கள் மருத்துவர்கள்தான்.
கொரோனா தொற்று நோயில் இருந்து மக்களை பாதுக்காக்க தனது உயிரையும் பொருட்படுத்தாது அரும்பணியாற்றும் மருத்துவர்களின் சேவைகளை போற்றும் விதமாக. கொரோனா நோய் தொற்றுகளினால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி புகழ் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.
கொரோனா நோய் தொற்றுக்கு மதம், சாதி, இனம் இல்லை என்றும் கொரோனாவால் உயிரிழக்கும் யாரையும் வேறுபடுத்தி பார்க்காமல் அவர்களின் இறுதிச்சடங்குகள் நடக்க ஒத்துழைப்போம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். இதை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் குருமன்ஸ் நல உரிமை சங்க தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் சாய்குமாரி, நந்தகோபால் (எ) கோபி, நாகராஜ் (எ) ராதா மற்றும் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
10 thoughts on “தமிழ்நாடு குருமன்ஸ் நல உரிமை சங்கம் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி!”
Comments are closed.