மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவரும், வெளிநாடு வாழ் இந்தியருமான மல்லிகா மூர்த்தி தமிழக தனது சொத்தை போலி கையெழுத்து போட்டு மோசடி செய்த சகோதரி சாந்தாவை சட்டரீதியாக சந்திக்கவுள்ளதாக கூறினார்
இது குறித்த விபரம் வருமாறு:
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரான, கோயம்புத்தூரைச் சேர்ந்த மல்லிகா மூர்த்தி நிர்மலா கல்லூரியில் படித்து 1961ல் முதல் தமிழ் டைப்பிஸ்டாக கோயம்புத்தூர முனிசிலிபாட்டியில் நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் திருமணமாகி தனது கணவருடன் மலேசியாவில்குடியேறினார்.
மல்லிகா மூர்த்தி தனது திறமையினால் மலேசிய நாட்டிற்கான இந்திய தூதரக அலுவலகத்தில் 1984 முதல் 2014 வரை பணிப்புரிந்து ஓய்வு பெற்று உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர் குடியுரிமை பெற்றுள்ள சுமார் 80 வயதுடைய மல்லிகா மூர்த்தி, தற்போது தனியாக வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து, நகை, பணம் உள்ளிட்டவற்றை தனது சொந்த சகோதரி சாந்தா உள்ளிட்ட சிலர் மோசடி செய்து விட்டதாக சென்னை மாநகர காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, சென்னை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுமார் 80 வயதுடைய நான், பல ஆண்டுகாலமாக வெளிநாட்டில், மலேசியாவில் வசித்து வந்தேன். அங்கு இந்திய தூதரக அலுவலகத்தில் பணிபுரிந்தேன். எனது கணவர் இறந்து விட்டார், குழந்தைகள் இல்லை. நான் சம்பாதித்த பணத்தையெல்லாம், மலேசியாவிலும், இந்தியாவிலும் வங்கி கணக்கில் சேமித்து வைத்துள்ளேன். மேலும் தமிழகத்தில் உள்ள எனது சகோதரி சாந்தா என்பவருக்கு அவ்வப்போது வங்கி மூலமாக பணம் அனுப்பி வந்தேன். வங்கி ஊழியரான எனது சகோதரி சாந்தா, எனக்கே தெரியாமல் எனது பெயரில் போலியான வங்கி கணக்கு துவங்கி, மற்ற வங்கிகளில் இருந்த எனது சேமிப்பு கணக்கிலிருந்து இந்த போலி வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி எடுத்து உள்ளார். இப்படி மோசடியான முறையில் சிறிது, சிறிதாக சுமார் 60 லட்சம் வரை மோசடியாக எடுத்துள்ள விபரம் எனக்கு சமீபத்தில்தான் தெரியவந்தது. எனது உடன்பிறந்த சகோதரியே என்னை மோசடி செய்துள்ளது என்னால் தாங்கி கொள்ள முடியாத அதிர்ச்சியை தந்துவிட்டது.
என்னுடன் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரு சகோதரன் உள்ளனர். இவர்களில் வங்கி ஊழியரான சாந்தாவை நம்பிய எனக்கு அவர் துரோகம் செய்துள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதனை நேற்று, நேரில் சந்தித்து புகார் அளித்தேன். அப்போது அவர் என்னிடம் மிகவும் கனிவுடனும், இனிமையாகவும் நடந்து கொண்டார். எனது புகார் குறித்து கனிவுடன் விசாரித்தார். புகாரின் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என இனிமையுடன் கூறினார். நான் அவருக்கும், தமிழக காவல்துறைக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வைத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும்வரை நான் ஓயமாட்டேன்” இவ்வாறு அவர் கூறினார்
8 thoughts on “போலி கையெழுத்து போட்டு லட்சக்கணக்கில் பணம் மோசடி”
Comments are closed.