சென்னை, 28 ஆகஸ்ட் 2018: இந்தியாவின் மிகப் பெரிய நுகர்வோர் மின்னணு மற்றும் ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட் நிறுவனமான சாம்சங்க் தனது கேலக்ஸி ஏ லைன் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில் கேலக்ஸி ஏ10எஸ் அறிமுகம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்ஃபோன்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி ஏ குடும்பத்தின் புத்தம் புதிய அறிமுகமான கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்தை அடுத்த நிலைக்கு மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ10எஸில் பொருத்தப்பட்டுள்ள 6.2 இன்ச் இன்ஃபினிடி –வி டிஸ்ப்ளே, ட்யூயல் ரியர் கேமரா, ஆற்றல்மிகு 4000எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகியவை ஈடு இணையற்ற அனுபவத்தை அளிக்கும்.
இது குறித்து சாம்சங்க் இந்தியா, மொபைல் பிசினஸ், இயக்குனர் ஆதித்ய பப்பார் கூறுகையில் ‘தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணி வகிக்கும் சாம்சங்க் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளது. அசத்தல் டிஸ்ப்ளே, உயரிய கேமரா, நீடித்து உழைக்கும் பேட்டரி, விரிவான பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்பார்க்கும் இன்றைய இந்திய மில்லேனியர்களுக்காக கேலக்ஸி ஏ10எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே கண்கவர் தோற்றம் மற்றும் சிறந்த செயல்பாட்டுடன் முழுமையான பேக்கேஜுடன் கேலக்ஸி ஏ10எஸ் விளங்குகிறது’ என்றார்.
ஆழமான காணும் அனுபவம் மற்றும் ஆற்றல்மிகு பேட்டரி
புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்ஃபோனில் அசத்தல் 6.2 இன்ச், ஹெச்டி+ இன்ஃபினிடி-வி டிஸ்ப்ளே உள்ளது. இது ஆழமான பிங்கே – வாச்சிங்க் காணும் அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக இன்றைய நெட்டிசன்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள ஆற்றல்மிகு 4000ஏஹெச் பேட்டரி தங்கு தடையற்ற ஸ்ட்ரீமிங்க், கேமிங்க் மற்றும் லைவ் ப்ராட் கேஸ்டிங்க் ஆகியவற்றுக்கும் உறுதுணையாக இருக்கும்.
நொடித் தருணத்தையும் தவறவிடாதீர்கள்
கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள ட்யூயல் ரியர் கேமரா தவற விடக் கூடாத தருணங்களைப் படமெடக்க விரும்பும் மில்லேனியர்களின் தேவையை நிறைவு செய்யும். இதில் பொருத்தப்பட்டுள்ள ட்யூயல் கேமராவில் 13 எம்பி ப்ரைமரி ரியர் கேமரா, எஃப் 1.8 அபெர்சர் மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா உள்ளன. இவை மூலம் பயனீட்டாளர் தேவையற்ற ஒலிகளைத் தவிர்த்து அழகான தருணங்களை மட்டுமே படமெடுக்கலாம். கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள 8 எம்பி ஃப்ரண்ட் கேமரா ஒளிரும் மற்றும் தெளிவான செல்ஃபிக்களை எடுக்கும் திறன் கொண்டதும் ஆகும்.
ஹூடின் கீழ் பொருத்தப்பட்டுள்ள ஆக்டா–கோர் புராசஸர் காரணமாக கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்ஃபோன் மிகச் சிறந்த மல்டி டாஸ்கராக விளங்குகிறது. ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கானர், ஃபேஸ் அன்லாக், 3ஜிபி + 32ஜிபி மற்றும் 2ஜிபி + 32ஜிபி கட்டமைப்பு ஆகிய மேம்பட்ட மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கேலக்ஸி ஏ10எஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாம்சங்க் கேலக்ஸி ஏ10எஸ் 2019 ஆகஸ்ட் 28 முதல் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து சில்லரைக் கடைகள், இ-ஷாப், சாம்சங்க் ஓபெரா ஹவுஸ் மற்றும் முன்னணி ஆன்லைன் சேனலகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
2ஜிபி ராம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுடன் கேலக்ஸி ஏ10எஸ் விலை ரூ 9,499/-
3ஜிபி ராம் + 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுடன் கேலக்ஸி ஏ10எஸ் விலை ரூ10,499/-
க்ரீன், ப்ளூ மற்றும் பிளாக் ஆகிய மூன்று கண்கவர் வண்ணங்களில் கேலக்ஸி ஏ10எஸ் கிடைக்கும்.
கேலக்ஸி ஏ10எஸ் தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்:
Display 6.2” HD+ (720×1520)
Infinity-V Display
Camera Dual Rear Main: 13MP, F1.8
Depth: 2MP
Front 8MP, F2.0
Body 156.9 x 75.8 x7.8mm
168g
AP Octa Core (Quad 2.0GHz + Quad 1.5GHz)
Memory 2GB / 3GB RAM
32GB Internal Storage
Micro SD slot (up to 512 GB)
SIM Card Dual SIM + SD Card Slot
Battery 4,000 mAh (typical)
OS Android 9.0 (Pie)
Biometric Authentications Rear Fingerprint Scanner, Face Recognition
Color Blue/Green/Black
சாம்சங்க் எலெக்ட்ரானிக்ஸ்
சாம்சங்க் உலகை ஈர்த்து மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் எதிர்காலத்தை உருவாக்குகிறது. தொலைகாட்சிப் பெட்டிகள், ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்ளெட், டிஜிடல் கருவிகள், வலையமைவு, மெமரி, எல்எஸ்ஐ, ஃபவுண்ட்ரி, எல்இடி தீர்வுகள் ஆகியவற்றுக்குப் புது விளக்கமளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு http://news.samsung.com/in, https://news.samsung.com/bharat, Twitter @SamsungNewsIN
மேலும் விவரங்களுக்கு:
வருண் சின்ஹாvarun.sinha@samsung.com
ரிதிக்கா தத்தா riticka@avianwe.com 91 99117 17995
11 thoughts on “கேலக்ஸி ஏ குடும்பத்தில் புத்தம் புதிய வரவு கேலக்ஸி ஏ10எஸ் குறித்து சாம்சங்க் இந்தியா அறிவிப்பு”
Comments are closed.