RRR படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது – நிரந்தர தலைப்பான தற்காலிக தலைப்பு

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர்களான வலம் வரும் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ராமாராவ் நடிக்கும் திரைப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வருகின்றது. 

இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.ஆர்.ஆர்’ (RRR) என்ற தலைப்பு வைக்கப்பட்டது. Rajamouli, Raam charan, Rama rao கூட்டணி என்பதால் RRR என்ற தலைப்பு வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அதுவே படத்தின் நிரந்தர தலைப்பு ஆகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் என்ற பெயருக்கு ஏற்றார் போல், ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. 
இதனுடன் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருப்பதால், பலரும் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு வெளியாவதாக இருந்த இந்தப் படம், படப்பிடிப்பு தாமதம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “RRR படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது – நிரந்தர தலைப்பான தற்காலிக தலைப்பு

  1. Pingback: หวยไทย

Comments are closed.