சென்னை, 15 ஏப்ரல் 2020: கொரோனா தொற்று பாதிப்பினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் வருமானமின்றி அத்தியாவசிய தேவைகளுக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை அறிந்து, பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜீத் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும் முகேஷ் சுரானா ஆகியோர் ஜாதி, மத பேதமில்லாமல் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களை திரிசூலத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.
இதற்கு காவல்துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவை அறிந்து சென்னை முழுவதும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
11 thoughts on “பட்டாளம் ஜெயின் சங்கம் சார்பில் திரிசூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு”
Comments are closed.