கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கெருகம்பாக்கத்தில் அரிசி, காய்கறிகள், பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களின் வழங்குகினார்.
அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் டி. உதயகுமார், செயலாளர் ஆர். பாலமுருகன், பொருளாளர் எம். சுப்பிரமணியன், துணைத் தலைவர் உத்திரகுமார், துணைச்செயலாளர் சந்தன்ராஜ், பல்லவரம் தொகுதி தலைவர் ராஜ், ஆலந்தூர் தொகுதி தலைவர் ஆர்.சிவபாலன் ஆகியோர்
ஏற்பாடு செய்தனர்.
8 thoughts on “பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கபட்டது”
Comments are closed.