சென்னையில் தேசிய கராத்தே போட்டி

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை meston school of Education என்கின்ற பள்ளியில் வைத்து 16 வது தேசிய Kenwa shito Ryu கராத்தே போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் சுமார் 800 கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த விழாவை கராத்தே மாஸ்டர் திரு. சண்முக ராஜா ஏற்பாடு செய்து இருந்தார். இந்த விழாவிற்கு பாரத் ஸ்ரீ கராத்தே சந்துரு அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்த விழாவிற்கு பாரதீய ஜனதா கட்சியின் திரு K.சுந்தரேசன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் திரைப்பட நடிகை இந்துப்பிரியா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய திரு. K.சுந்தரேசன் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து தற்காப்பு கலைகளையும் தமிழக அரசு எல்லா பள்ளிகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி, வேலை, திருமணம் என்பது எவ்வளவு முக்கியமோ அது போல தற்காப்பு கலையும் அத்தியவிசயமான ஓன்று என்றார். பொதுமக்கள் பெண் குழந்தைகளுக்கு அவசியம், இது போன்ற தற்காப்பு கலைகளை கற்று தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட நடிகை இந்து பிரியா வெற்றி கோப்பைகளை வழங்கினார்.

பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அனைவருக்கும் அகில இந்திய ஐயா நரேந்திர மோடி தேசிய பேரவை சார்பில் திரு.கராத்தே சந்துரு இனிப்புகள் வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார் கராத்தே மாஸ்டர் திரு.சண்முகராஜா மற்றும் திரு.ராம்குமார் அவர்கள்.

Author: ADmiNIstRAtoR