கொரோனா வைரஸ் பாதிப்பு வங்கி கடனாளிகளுக்கு 3 மாத தவணை அவகாச சலுகையோடு வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கோரிக்கை

சென்னை ஏப்ரல் 3, 2020: கொரோனா வைரஸ் பாதிப்பால் வங்கிக்கடனாளிகளுக்கு 3 மாத தவணை அவகாச சலுகையோடு 3 மாத வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டநிலையில் இந்தியாவிலும் பெருமளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டநிலையில் நாட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் நாட்டுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகிறது.இருந்தபோதிலும் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு அதை மாதாமாதம் தவணை முறையில் திருப்பி செலுத்தும் கடனாளிகளுக்கு 3 மாதம் காலஅவகாசம் அளித்துள்ளது.

அதாவது மார்ச், ஏப்ரல்,மே மாதங்களில் வரும் மாதத் தவணை தொகையை ஜூன் மாதம் முதல் கட்டலாம் என அறிவித்துள்ளது. ஆனாலும் வட்டியை தள்ளுபடி செய்யாமல் 3 மாத காலத்திற்கு வட்டி,லேட் பீஸ் எண்ணும் காலதாமத கட்டணத்தொகையையும் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துவருகிறது.

இதனால் வங்கியில் கடன் வாங்கிய கடனாளிகளுக்கு “வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது” போன்று அவதியுறும் நிலை உருவாகிஉள்ளது. அதனால் மத்திய அரசும், மாநில அரசும் ரிசர்வ் வங்கியும் இதனை முழுமையாக ஆராய்ந்து கடனாளிகள் பயன்பெறும் வகையில் 3 மாத காலத்திற்கான வட்டிபோன்று வங்கிக்கட்டணங்களை அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும்.

மேலும் இருசக்கரவாகனங்கள், கார், வீட்டுவசதிவாரியம் அதே போன்று அனைத்து வகையான மாதாந்திர செலுத்தும் கடன்களுக்கும் 3 மாத காலம் அவகாசமும் அதற்குறிய வட்டியையும் முழுவதுமாக தள்ளுபடி செய்யது மத்திய மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் கடனாளிகளுக்கு உண்மையான பயன்கிடைத்திடும் என்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்

Author: ADmiNIstRAtoR