சட்ட உரிமை கவுன்சில் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம்

சட்ட உரிமை கவுன்சில் (Legal Rights Council) தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம், மாநில நிர்வாகி மாலினி ஜெயச்சந்தின் தலைமையில் சென்னை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக் கவுன்சிலின் தேசிய பொதுச் செயலாளார் ராஜாலக்ஷ்மி மந்தா நிர்வாகிகளின் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு பெண்களின் திருமண வயது 21 என சட்டம் கொண்டு வந்திருப்பது பெண்கள் சுயமாக முடிவெடுக்கவும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெறவும் ஏதுவாக அமையும் என தெரித்தார்.

இந்நிகழ்ச்சியில் லீகல் ரைட்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் குருஜி, தேசிய செயலாளர் ராமச்சந்திர ரெட்டி, பஜ்ரங் பொறியியல் கல்லூரியின் தலைவர் எம்.ஜி.பாஸ்கர் , மதன்குமார் , டாக்டர் அர்ச்சனா, ராமதாஸ் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR