கண் தான இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நடிகர் சீயான் விக்ரம் | கோடம்பாக்கம் மற்றும் திருவொற்றியூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனைகளை தொடங்கியிருக்கும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை

கண் தான இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நடிகர் சீயான் விக்ரம், இதில் பங்கேற்குமாறு அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள். வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் 100 நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்படும்

சென்னை / 4 செப்டம்பர் 2019: 1957 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, கண் பராமரிப்பு சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற முன்னோடியான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை மாநகரில் கோடம்பாக்கத்திலும் மற்றும் திருவொற்றியூரிலும் நவீன கண் சிகிச்சை மருத்துவமனைகளை தொடங்கியிருக்கிறது.

இத்தொடக்கவிழா நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரபல நடிகர் சீயான் விக்ரம், கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை வழங்குமாறு தனது ரசிகர்களை ஊக்குவித்திருப்பதன் மூலம், கண் தானம் என்ற இந்த உன்னதமான நோக்கத்திற்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால், கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் தலைவர் டாக்டர். பாஸ்கரன், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர். திவ்யா பிரதீபா. எஸ் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

கோடம்பாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டிருப்பதை சிறப்பாக நினைவுகூரும் வகையில், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

இத்தொடக்க விழா நிகழ்வின்போது கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து பங்கேற்பாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் சீயான் விக்ரம், “கோடம்பாக்கத்திலும், திருவொற்றியூரில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் புதிய கிளைகளை திறந்து வைப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியளிக்கிறது. கண்கள்தான் இன்று உடலில் மிக அதிக வளர்ச்சி பெற்ற உணர்திறன் உறுப்பாகும். பார்வைத்திறன் அற்றவர்களாக இருப்பதால், இந்த அழகான உலகை காண்பதற்கான வாய்ப்பை பல நபர்கள் இழந்திருக்கின்றனர். எனினும், நமது இறப்பிற்குப் பிறகு நமது கண்களை தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற அந்த நபர்களுக்கு பார்வைத்திறனை திரும்பவும் வழங்குவது சாத்தியமானது. தேசிய கண்தான இருவார நிகழ்வு அனுசரிக்கப்படும் தருணத்தில், கண்தானத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரமானது, தங்களது கண்களை தானமாக வழங்குவதற்கு பலரையும், குறிப்பாக எனது ரசிகர்களையும் ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். பார்வைத்திறனற்ற நபர்களின் வாழ்க்கையில் ஒரு ஆக்கப்பூர்வ மாற்றத்தை உருவாக்குவதற்கு கண்தானம் உதவுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வசதியற்ற 100 நபர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சைகளை செய்ய முன்வந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் அறிவிப்பிற்காக அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்” என்று கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால் பேசுகையில், “கோடம்பாக்கத்திலும் மற்றும் திருவொற்றியூரிலும் எமது மிக நவீன மருத்துவமனைகளை தொடங்கியிருப்பது எங்களுக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது. ஒட்டப்படும் IOL, SFT, PDEK மற்றும் பாகோனிட் (Phakonit) போன்ற நவீன சிகிச்சைகளை வழங்கி கண் மருத்துவவியலில் புத்தாக்க செயல்பாடுகளை மேற்கொள்வதில் நாங்கள் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறோம். புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனைகள், இங்கு வரும் நோயாளிகளுக்கு உயர்தரமான கண் பராமரிப்பு சேவைகளை வழங்கும். சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகில் மொத்தமுள்ள பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்களில் 20% இந்தியாவில் வசிக்கின்றனர். இந்தியாவில் பார்வைத்திறன் பாதிப்பு நேர்வுகளில் ஏறக்குறைய 80% வராமல் முன்தடுக்கப்படக் கூடியவையாகவும் மற்றும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. தங்களது கண்களை தானமாக வழங்க மக்கள் பெருமளவில் முன்வருவார்கள் என்றால் நமது நாட்டிலிருந்து, முன்தடுப்பு செய்யக்கூடிய பார்வைத்திறனிழப்பை முற்றிலுமாக ஒழிக்க முடியும்” என்று கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் டாக்டர். திவ்யா பிரதீபா. எஸ், கூறியதாவது: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் திருவொற்றியூர் மையமானது, வடசென்னை பகுதி மக்களுக்கு சிறப்பான கண் பராமரிப்பு சேவைகளை வழங்கும். வடசென்னையில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்கின்ற கண் பிரச்சனைகளின் தனித்துவ தன்மை மீது நாங்கள் ஆழமான புரிதலை கொண்டிருக்கிறோம். வடசென்னையில் வசிக்கும் மக்கள் அவர்களது கண்களை சரியாகப் பராமரிப்பதில் அவர்களது நம்பிக்கைக்குரிய தோழனாக திருவொற்றியூரில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை திகழும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்”.

கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறைத் தலைவர் டாக்டர் பாஸ்கரன் பேசுகையில், “கருவிழி, கண்புரை, கண்அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு, மாறுகண் பிரச்சனை, விழித்திரை, மூளை நரம்பியல் சார்ந்த கண் மருத்துவம் மற்றும் குறைவான பார்வைத்திறனை சரிசெய்வது ஆகியவை தொடர்பான, உகந்த சிகிச்சைகள் உட்பட, கண் தொடர்புடைய அனைத்து சிகிச்சை தேவைகளுக்கும் ஒற்றை நிறுத்த தீர்வு மையமாக இப்புதிய மருத்துவமனை இருக்கிறது” என்று கூறினார்.

கோடம்பாக்கத்தில் டாக்டர் அம்பேத்கர் சாலை, எண். 33 என்ற முகவரியில், கிரேஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் அமைந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, 4,775 சதுரஅடி பரப்பளவு அமைவிடத்தில் இயங்குகிறது. எண்.49/60, தெற்குமாடவீதி, திருவொற்றியூர், எம்எஸ்எம் திரையரங்கம் அருகே 3600 சதுரஅடி பரப்பளவுடன் திருவொற்றியூரில் தொடங்கப்பட்டிருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை செயல்படுகிறது.

ஊடக தொடர்பிற்கு: மகேஷ் குமார் / இம்ப்ரிமிஸ் பிஆர் / 98845 45000

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “கண் தான இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நடிகர் சீயான் விக்ரம் | கோடம்பாக்கம் மற்றும் திருவொற்றியூரில் மிக நவீன கண் சிகிச்சை மருத்துவமனைகளை தொடங்கியிருக்கும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை

  1. Pingback: scam links

Comments are closed.