தமிழ்நாட்டில் கொரொனோ ஊரடங்கு பாதிப்பினால் சாலையோர மக்கள் மற்றும் வசதியற்ற குடிசை வாசிகளுக்கு பல்வேறு அமைப்புகள் பல்வேறு உதவிகள் செய்து வந்தாலும் சென்னை மாநகர் முழுவதும் ஒருங்கிணைந்த சட்ட நல பவுண்டேஷன் சார்பில் இளம் வழக்கறிஞர்கள் சாலையோர மற்றும் குடிசை வாசிகளுக்கு சென்னை நகர் முழுவதும் உணவு பொட்டலங்களை வழங்கி வருவது ஒரு பெருமைக்குரிய விஷயம்.
படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த இளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து இதனை செய்து வருகின்றனர். இதன் தமிழ்நாட்டின் தலைவர் வழக்கறிஞர் எஸ்.கே. சிவக்குமார் தலைமையில் இந்த உதவி செய்து வருகின்றனர். இவருடன் வழக்கறிஞர் வினோத் குமார், வழக்கறிஞர் தினேஷ்குமார், வழக்கறிஞர் ராஜ் குமார், வழக்கறிஞர் ஜெகன் ராஜ், வழக்கறிஞர் புருஷோத்தமன், வழக்கறிஞர் சந்தோஷ்குமார், வழக்கறிஞர் திலீபன், வழக்கறிஞர் வினோத் போன்றவர்களும் கரம் கோர்த்து ஏழை-எளிய குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
13 thoughts on “சென்னை மாநகர் முழுவதும் ஒருங்கிணைந்த சட்ட நல பவுண்டேஷன் சார்பில் இளம் வழக்கறிஞர்கள் சாலையோர மற்றும் குடிசை வாசிகளுக்கு உணவு உதவி”
Comments are closed.