அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் லே-அவுட் ப்ரமோட்டர்ஸ் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.முனீஸ்வரன் தலைமையில் சோளிங்கர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, FAIRA உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இக்கூட்டத்தில் மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதியை ஒற்றை சாளர முறையில் முதல் தவணையாக மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பரீட்சார்த்த முறையில் சோதனைக்காக கடந்த மே 1 முதல் இணையதளம் துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வீட்டுமனைகளை ஏற்படுத்தும் அபிவிருத்தியாளர்கள் அதற்குண்டான அடிப்படை கட்டமைப்புகளை அவர்களே கட்டமைக்கும் வகையில் அரசாணை எண் 181/2020 ஐ மாற்றி அமைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.

விண்ணை முட்டும் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

ஒற்றை சாளர முறையில் இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ளதை மாற்றியமைக்க வேண்டும் அல்லது தானியங்கி முறையில் இறுதி ஒப்புதல் வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும்.

20/10/2010 க்கு பின் டிடிசிபி அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப் பிரிவுகளில் TNRERA வில் பதிவு செய்யாமல் பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மனைகளை TNRERA வில் தடையின்மை சான்று பெறாமல் மறுகிரையம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

பதிவு அலுவலகங்களில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணத்தை கூராய்வு செய்வதற்கும் முன்பதிவு டோக்கன் பெறுவதற்கும் (தற்போதுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் போன்று) பதிவு மாவட்டம் தோறும் செயலாக்க உதவி மையம் ஏற்படுத்திட வேண்டும்.

மாவட்ட அளவில் செயல்படும் டிடிசிபி அலுவலகங்களுக்கு நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

கட்டுமானப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பதற்கு மாநில அரசு மைய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இக்கூட்டத்தில் சோளிங்கர் நகர மன்றத் தலைவர் A.அசோகன், FAIRA தலைமை நிலைய செயலாளர் R.கார்த்திக், மணிகண்டன், நரசிம்மன், சேகர், ஞானசீலன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR