சென்னை அக் 23, 2019: சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே! அடுத்தவங்கள சந்தோஷப்படுத்திப்பார்ப்பதுதான் எனும் வாக்கின் வழியே வாடிய பயிர்கண்டு வாடிய வள்ளலார் போல, வறுமையில் வாடிம் மக்களை மகிழ்வுறுத்தி இன்புறும் இனிய உள்ளம் கொண்ட ரோட்டரி கிளப் சென்னை சோழா சங்கம் இன்று தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தை நிகழ்த்தியது. தான் இன்புறுவதால் மட்டும் நிறைவுறாது தம் இன மக்களின் இன்பத்தைக் கருத்தில் கொண்டு மிகச்சிறப்பான இந்நாளை கொண்டாடினர்.
இல்லாமையை, இல்லாமல் ஆக்கி இன்பங்கள் இல்லங்களில் நிறையுமாறு செய்யும் வகையில் இனிப்பு, புத்தாடை போன்றவற்றை ரோட்டரி சங்கம் இன்று வழங்கியது. 500போருக்கும் மேல் இவ்வாறு இலவசமாக வழங்கி வரும் இப்பணி இந்த ஆண்டும் தொடர்ந்து 11ஆவது ஆண்டாக சிறப்பாக நடந்தது மிகுந்த மனநிறைவைத் தருவதாக திரு. எஸ்.பி.ரமேஷ் அவர்கள் கூறினார்.
சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க ரோட்டரி கிளப் ஆளுநர் ஜி.சந்திரமோகன் Rtn அவரஅவர்களும் திரு. I.S.A.K. நசார் Rtn அவர்களும் சங்க உறுப்பினர்கள் பலரும் இணைந்து கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ப்ரைடு ஹோட்டலில் மிகச்சிறப்பாக நிகழ்மகிந்தனர். மகிழ்வோம் மகிழ்விப்போம் எனும் வகையில் இவ்விழா தொடர்ந்து பதினோராவது ஆண்டாக, இனிதே நிகழ்ந்தது.