‘டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்தவன் நான்” காக்டெய்ல் விழாவில் P.G.முத்தையா நெகிழ்ச்சி

“ரொமான்ஸ் படம் பார்த்து பார்த்து போரடித்து விட்டது” ; நமீதாவின் காக்டெய்ல் கலாட்டா

‘டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்தவன் நான்” ; காக்டெய்ல் விழாவில் P.G.முத்தையா நெகிழ்ச்சி

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா-M.தீபா தயாரித்துள்ள படம் ‘காக்டெய்ல்’ இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரா.விஜயமுருகன் இயக்கியுள்ளார். யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இசையமைப்பாளர் சாய் பாஸ்கர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ், கருணாகரன், மைம் கோபி, எஸ்ஜிசி சினிமாஸ் மணிகண்டன் மற்றும் கனகராஜ், ராஜா, முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “கல்லூரியில் படிக்கும்போது கனவுகளோடு இருப்போம் இல்லையா..? அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.. யார் என்ன சொன்னாலும் தூக்கி போட்டு விடாதீர்கள்.. கண்டிப்பாக ஒருநாள் அது நிறைவேறும்” என்றார்.

தயாரிப்பாளர் P.G.முத்தையா பேசும்போது, “சினிமா பற்றிய எந்த விஷயங்களும் தெரியாமல் தான் சென்னைக்கு வந்தேன்.. எஸ்ஆர்எம் கல்லூரி சேர்ந்து படித்தபோதுதான் சினிமா என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்த நான், இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் இது அனைத்தையுமே எனக்குத் தந்தது எஸ்ஆர்எம் கல்லூரி தான்” என்றார்.

நடிகை நமீதா பேசும்போது, “எனக்கு வழக்கமான ரொமாண்டிக் படங்களை பார்த்து பார்த்து போரடித்து விட்டது.. எனக்கு இதுபோன்ற காமெடி படங்கள்தான் ரொம்ப பிடிக்கும்.. காக்டைல் படத்தை நான் தியேட்டருக்கு போய் பார்ப்பேன்” என்று கூறி கைதட்டலை அள்ளினார்.

நடிகர் எஸ்வி சேகர் பேசும்போது ஒரு நல்ல சிவராத்திரி தினமாக பார்த்து காக்டெய்ல் ரிலீஸ் செய்கிறார்கள். நமக்கு நல்லது நடக்கிறது என்றால் அந்த நாளும் நல்ல நாள் தான்”என்றார்.

எஸ்.வி.சேகர், நமீதா, அசோக் செல்வன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் காக்டெய்ல் படத்தின் இசைத்தட்டை வெளியிட எஸ்ஜிசி சினிமாஸ் கனகராஜ், முகேஷ் பிலிம்ஸ் நிறுவனர் முகேஷ், லகரி ஆடியோ முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்தப்படத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘காக்டெய்ல்’ என்கிற பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு பறவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை.. வரும் மார்ச்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.

தொழிநுட்ப கலைஞர்கள்

இயக்கம் ; ரா.விஜயமுருகன்

இசை ; S.சாய் பாஸ்கர்

ஒளிப்பதிவு : RJ ரவீன்

படத்தொகுப்பு ; SN ஃபாசில்

கலை ; தினேஷ் மோகன்

பாடல்கள் : விவேக், ரவி

நடனம் : சந்தோஷ்

தயாரிப்பு நிர்வாகம் ; உமா மகேஸ்வர ராஜு

நிர்வாக தயாரிப்பு ; சௌந்தர் பைரவி

தயாரிப்பு ; P.G.முத்தையா-M.தீபா

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “‘டிவி கூட இல்லாத வீட்டிலிருந்து வந்தவன் நான்” காக்டெய்ல் விழாவில் P.G.முத்தையா நெகிழ்ச்சி

  1. Pingback: 다시보기
  2. Pingback: ไฮเบย์

Comments are closed.