சென்னை நடுநிலைப்பள்ளியின் 62-வது பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா

கோடம்பாக்கம், 28 பிப்ரவரி 2020: சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியின் 62-வது பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா இப்பள்ளியின் தலைமை ஆசிரியை பி.புஷ்பலதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் டி.ராமஜெயம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் ஆர்.பாரதிதாசன், உதவி கல்வி அலுவலர் கே. நாகலட்சுமி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே இளமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் ஊரணி பவுண்டேஷன் தலைவர் எஸ்.ரத்தினவேல், ஓம் ஸ்ரீ மகா கணபதி ஆன்மீக மற்றும் சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் கிருத்தி வாச குருக்கள், உதவி கல்வி அலுவலர் சி. பாலசுப்பிரமணியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் விசுவநாதன், அரிமா வெங்கட கிருஷ்ணன், ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் சென்னை நடுநிலைப் பள்ளியின் ஆசிரியை விமலா ஞான செல்வி அவர்கள் நன்றியுரை நல்கினார். இதில் திறளான பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR