கொரோனா நிவாரணம் வழங்க தன்னார்வகளின் சேவைகள் அரசுடன் இணைந்து செயல்பட விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது: சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விசுவநாதன்

கொரோனா வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வ அமைப்புகளின் தொண்டு வரவேற்பு க்கும் பாராட்டுதலுக்கும் உரியதாகும்.

தன்னார்வ அமைப்புகள் சேவையாற்ற எந்த தடையும் விதிக்க வில்லை.

ஊரடங்கு காலம் என்பதால் அந்த விதிமுறைகளை பின்பற்றிடவும், தொற்று நோயினால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பான முறையில் சேவையாற்றும் விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பகல் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் ஓரிரு கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.

தன்னார்வ அமைப்புகள் தாங்கள் சேவையாற்ற விரும்பும் பகுதிகளிலுள்ள காவல்துறை வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் சேவையாற்றலாம்.

இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர். ஏ. கே. விசுவநாதன் விளக்கமளித்துள்ளார்.

Author: ADmiNIstRAtoR

3 thoughts on “கொரோனா நிவாரணம் வழங்க தன்னார்வகளின் சேவைகள் அரசுடன் இணைந்து செயல்பட விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது: சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விசுவநாதன்

  1. Pingback: 티비위키
  2. Pingback: 늑대닷컴

Comments are closed.