பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா சென்னையில் நடந்திய வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

சென்னை, ஜூன் 2023: பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனது வாடிக்கையாளர் வங்கியின் சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நேற்று (07.06.2023) சென்னையில் நடத்தியது.

வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவை மேம்படுத்துவதற்காக வங்கி எவ்வாறு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது என்று அந்நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.

டிஜிட்டல் மண்டல பொது மேலாளர் ஸ்ரீ அருண் கபடே, சென்னை மண்டல மேலாளர் ஸ்ரீ நாகேந்தர் கவுட், துணை மண்டல மேலாளர் ஸ்ரீ பி.எஸ்.சாயீஸ்வர ராவ் ஆகியோருடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு .ஆஷீஷ் பாண்டே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

அறிவு மற்றும் செழுமையை உணர்த்தும் வகையில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. வங்கியின் புதிய திட்டங்கள், புதிய முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளின் சிறப்புகள், YOY ஆண்டு வளர்ச்சி மற்றும் வங்கியின் எதிர்கால வளர்ச்சி குறித்து நிர்வாக இயக்குநர் திரு. ஆஷிஷ் பாண்டே அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு விளக்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் இந்த நிகழ்வில் ஏராளமான வாடிக்கையாளர்கள் பங்கேற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய அனைத்து வகையான வங்கித் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்க எங்கள் வங்கி உறுதி பூண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் வங்கி தெற்கு பிராந்தியத்தில் கணிசமாக வளர்ந்து வருகிறது. அதற்குக் காரணமான எங்கள் வங்கி ஊழியர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, எங்கள் வங்கிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களான உங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று பேசினார்.

வங்கிகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக ரீதியான வங்கிகளின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி ஆண்டுக்கு 29.49 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளின் (CASA) வைப்பு தொகையை கருத்தில் கொண்டாலும் 53.38 சதவீதத்துடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி.ஆது மட்டுமின்றி லாபத்தில் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிகர லாபம் கிட்டத்தட்ட 126 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.2,602 கோடியாக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சியின் சதவீத அடிப்படையில் பொதுத்துறை கடன் வழங்குபவர்கள் மத்தியிலும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிதான் முதலிடம் வகிக்கிறது.

நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். 1261 SB கணக்குகள், 51 நடப்புக் கணக்குகள், 971 PMSBY, 442 PMJJBY, 223 APY மற்றும் மொத்தம் 165.47 கோடி வணிகம் இந்த வாடிக்கையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்டது.

MSME, சில்லறை வணிகம் மற்றும் கல்விக் கடன்களின் பயனாளிகள் முதல் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஒப்புதல் கடிதங்களை பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆஷிஷ் பாண்டே அவர்கள் வழங்கினார்.

Author: ADmiNIstRAtoR