தனி அலுவலரை பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் உள்ள 6 கல்லூரிகளுக்கும் நியமிக்க வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) சார்பில் ஆர்ப்பாட்டம்

179 ஆண்டுகளைக் கடந்த பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை செல்லம்மாள் கல்லூரி, அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரி, கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி உட்பட ஆறு கல்லூரியில் இயங்கிவருகின்றன.

இந்த ஆறு கல்லூரிகளில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி 29.12.2020 அன்று வழங்கப்பட்ட ஆணையின்படி பச்சையப்பன் அறக்கட்டளை சொத்தாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் வழிகாட்டுதலின்படி தனி நீதிபதி அவர்களின் 30.11.2021 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி மூன்று மாதங்களுக்குள் அறக்கட்டளையின் தேர்தலை நடத்தி உரியவர்களிடம் அறக்கட்டளை ஒப்படைக்க மட்டுமே இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை, ஆனால் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திக் கொண்டு 6 கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையும் விரோதப் போக்கையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அறக்கட்டளையின் செயலரை சொத்தாட்சியர் அவர்கள் 05.04.2021 அன்று துரைக்கண்ணு என்பவரை நியமித்தார்.

தேர்தலை நடத்த மட்டுமே அதிகாரமுள்ள அறக்கட்டளைக்கு கல்லூரியில் பணிபுரியக்கூடிய பேராசிரியர்களின் மீது பணியிடை நீக்கம் பணியிடமாறுதல் பணிநீக்கம் செய்து கல்லூரி பேராசிரியர்களின் மன உளைச்சலையும் மனப் போராட்டத்தையும் உருவாக்கி வருகின்றனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் செயலர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு கல்லூரிகளின் பணிபுரியக்கூடிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது பல்வேறுவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளில் சட்டத்திற்கு புறம்பாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

இதனை பல போராட்டங்களில் மூலமாகவும் பல்வேறு மனுக்களின் மூலமாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பலமுறை அறக்கட்டளை நிர்வாகம், தமிழக அரசு உயர்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குனர் மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பேராசிரியர்களை பொய்யான காரணங்களை சுட்டிக்காட்டி பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் படியும், தமிழக அரசின் ஆணைப்படி கல்லூரி கல்வி இயக்குனர் அனுமதி அளித்தும் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பணி புரியக்கூடிய பேராசிரியர்களின் பணி மேம்பாடு குறித்த கோப்புகளை கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பாமல் பொய்யான காரணங்களை சுட்டிக்காட்டி காலம் தாழ்த்தி நிர்வாகம் செய்து வருகிறது.

Author: ADmiNIstRAtoR