பெரியார் நகரில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு வீரவணக்கம்

தென்சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகரில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 63வது நினைவு நாளை முன்னிட்டு வேளச்சேரி உள்ள பெரியார் நகர் பகுதியில் முற்போக்கு மாணவர் கழகம் அனைத்துக் கல்லூரி மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் மற்றும் அகில இந்திய பத்திரிகை சங்கம் மாநிலச் செயலாளர் த.மோனிஷ்வரன் தலைமையில் இன்று புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் த.இளையா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்

இந்த நிகழ்ச்சியில் 177 வட்ட செயலாளர் பெருமாள் 177 வட்ட பொருளாளர் ஜெகன் மற்றும் முற்போக்கு மாணவர் கழக குருநானக் கல்லூரி தலைவர் ரூபேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR