சென்னையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்தினாளிகள் குடும்பத்திற்கு தொண்டு நிறுவனம் மூலம் வீடு வீடாக சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன

சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அஃபி ட்ரஸ்ட் (AFI TRUST -Chennai) என்ற தொண்டு நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் இன்றி தவித்து வரும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.

கடந்த 55 நாட்களில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த 740 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து தொண்டு நிறுவனத்தின் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் எல். மணிகண்டன் கூறுகையில், இந்த சேவையை இறைவன் தந்த பணியாக நினைத்து செய்து வருகிறோம். கொரானாவல் பல குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன. அந்த குடும்பங்களின் வாழ்வில் ஒளி ஏற்ற எங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறோம். இந்த சேவைகள் செய்ய நன்கொடை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல தன்னார்வலர்கள் மூலம் கிடைக்க கூடிய நிதியைக் கொண்டு சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு உதவும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Author: ADmiNIstRAtoR