தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா?

புதிய பைலா படி தேர்தல் நடத்த கூடாது என்று கோரி தயாரிப்பாளர் மன்னன் வழக்கு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலுக்கு
உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் , இணைச்செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் திரு. வெங்கட்ராமன் மற்றும் திரு. பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று அறிவித்திருந்தது.

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தற்போதைய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் மன்னன் தற்போதைய உள்ள புதிய பைலா படி தேர்தல் நடத்த கூடாது என்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசனைப்படி நமது மூத்த முன்னோடிகளான மார்டன் தியேட்டர் சுந்தரம், எஸ். எஸ். வாசன், AVM. மெய்யப்ப செட்டியார், முக்தா ஸ்ரீனிவாசன், KRG, ராமநாராயணன் ஆகியோர் கொண்டுவந்த பைலா முறைப்படி தேர்தலை நடத்த கோரி இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

Author: ADmiNIstRAtoR

6 thoughts on “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா?

  1. Pingback: Kardinal Stick
  2. Pingback: matte concealer

Comments are closed.