ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 55ம் ஆண்டு ஆடித் திருவிழா

கார்ப்பரேஷன் காலனி, சீனிவாசபுரம் கண்ணம்மா பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 55 ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளியன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பால்குடம் ஏந்தி வீதி உலா வந்து சிறப்பித்தனர்

நிகழும் ஸ்ரீ விகாரி ஆண்டு ஆடி மாதம் 26 ஆம் நாள் நான்காம் வாரம்.(11.08.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அம்மனை வர்ணித்து அம்மன் அருள்வாக்கு பெற்று அபிஷேக அலங்கார ஆராதனை புரிந்து வீதிகளில் சக்தி கரகம் வலம் வந்து சன்னதி அடைந்து பகல் 12 மணி அளவில் படையல் அர்ச்சனையும் கூழ் வார்த்தலும் இனிதே நடந்தேறும். அன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் அன்றலர்ந்த நூதன மென்மலர் அலங்காரத்தோடு மின் பல நிற விளக்கு சோபையோடும் வானவேடிக்கை யோடும் வீதிவலம் பவனி வந்து அம்மன் அருள் இன்பம் புரிவார். அன்று இரவு பக்தகோடிகள் இனிது வாழ அம்மனை தரிசித்து அருட் பிரசாதம் பெற்று இல்லத்தில் இன்னல் நீங்கி வளம் செழித்து நீடூழி வாழ வேண்டுகிறோம்

இந்த விழாவை தலைமையேற்று நடத்துபவர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி அவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர்

Author: ADmiNIstRAtoR

2 thoughts on “ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 55ம் ஆண்டு ஆடித் திருவிழா

Comments are closed.