மீண்டும் ஒலித்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்!

16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

அரங்கிற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவைச் செயலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதலாவதாக தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறியே ஸ்டாலின் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் உறுதி மொழி ஏற்று வருகின்றனர். நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

~ நன்றி சமயம்

Author: ADmiNIstRAtoR