நடிகர் சம்பத்ராம்’ன் 200வது திரைப்படமான “கசகசா”

நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடந்த 20 வருடத்தில் இளம் அறிமுக இயக்குனர் டாக்டர் திரு.தமிழ்சுடர் அவர்களின் இயக்கத்தில் என்னுடைய 200வது திரைப்படமான “கசகசா” வின் முதல் தோற்ற புகைப்படத்தை தங்களிடம் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

இந்த நல்ல சமயத்தில் கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து எனக்கு நடிக்க வாய்ப்பளித்து வந்த இனிமேலும் அளிக்க இருக்கிற இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், இனை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், தயாரிப்பு மேலாளர்கள், சண்டை பயிற்சியாளர்கள், சண்டை கலைஞர்கள், நடண இயக்குனர்கள், நடண கலைஞர்கள், என் சக நடிகர்கள், கலை இயக்குனர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உடை அலங்கார கலைஞர்கள், முக அலங்கார கலைஞர்கள், உணவு உபசரிக்கும் தொழிலாளர்கள், லைட்மேன்கள் மற்றும் உடன் பணியாற்றிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மனைவி, மகள், குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் நான் இந்த அளவில் இருந்திருக்க முடியாது – நடிகர் சம்பத்ராம்

Author: ADmiNIstRAtoR