சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் நிறுவனர் நாள் தினம் அனுசரிப்பு நிகழ்வு

சென்னை: ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இந்த ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் ஜெயலட்சுமி அவர்களின் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவனர் நாள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

மேலும் ஜெயலட்சுமி அம்மையார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் துணைவியார் குழந்தைகளுடன் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

பிறகு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் சொந்த தயாரிப்பான ஐ தீர்த்தா என்கிற மினரல் குடிநீர் பாட்டில் அறிமுகம், இன்னொகைஸ் நிறுவனத்தின் கிப்ட் கார்டு அறிமுகம், ஒலா கேப்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களின் அங்கீகரிக்கப்ப்டட சேவை முகவராக செயலபட அனுமதி போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அலுவலக ஊழியர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக பாடல் பாடியும், நடனமாடியும், மிமிக்ரி செய்தும் மகிழ்ந்தனர்.

மேலும் அவர்களை கௌரவிக்கும் விதமாக ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், வெட்கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி
கௌரவிக்கப்பட்டது.

இறுதியில் மறைந்த ஜெயலட்சுமி அம்மையார் அவர்களின் 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சுரேந்திரன், மாதேஷ்வரன், துரை செந்தில் அருள் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிறுவனர் நாள் அனுசரிப்பு தினம் குடும்ப விழா போன்று நடைப்பெற்றது.

Author: ADmiNIstRAtoR