சிவனடியார் மவுண்ட் கோபால் மீது ஆலந்தூர் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்க பட்டது

சமூக வலைதளங்களில் முஸ்லிம்கள் குறித்து கொச்சை படுத்தும் விதத்தில் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைக்கும் பாசிச சக்திகள் திட்டமிட்டு செயல் பட்டு வருகின்றன அதில் குறிப்பாக சிவனடியார் மவுண்ட் கோபால் எல்லை மீறி பதிவு செய்வது குறித்து இன்று காஞ்சி மாவட்ட ஆலந்தூர் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரி A.C.ஜீவானந்தம் அவர்கள் இடத்தில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் மவுண்ட் கோபாலை கைது செய்ய வில்லை என்றால் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மிக பெரிய போரட்டம் நடத்த படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார் கொடுப்பதில் தமுமுக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, பிஎப்ஐ என இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Author: ADmiNIstRAtoR