சாமானியர் ஒருவரின் நிலை எப்படி தலைகீழாக மாறியுள்ளது | Photos of Lockdown mood of vijaysethupathi HUMAN photoshoot artistically framed by international photographer L.Ramachandran

ஊரடங்கு 5 மாதங்களாகியுள்ள நிலையில் சென்னையில் சாமானியர் ஒருவரின் நிலை எப்படி தலைகீழாக மாறியுள்ளது என்பதை பிரபல திரைப்பட நடிகர் விஜய்சேதுபதியின் இன்றைய தோற்றத்தை தன் புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா எனும் கொடிய வைரஸுக்கு முற்றுபுள்ளி வைக்க மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும், மத்திய மாநில அரசுகளும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. நோய் தொற்று ஏற்பட்டு பாதித்தவர்கள் ஒருபுரம் என்றால், தொற்று ஏற்படாதவாறு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மனதளவில் பாதித்தவர்கள் மற்றொருபுரம். நாள்தொறும் பரபரப்பாக இயங்கி வந்தவர்கள் எல்லாம், தற்போது செய்வதறியாது வீட்டில் முடங்கிபோய் உள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நினைத்தவர்கள் எல்லாம் தற்போது வீட்டு சிறையில் அடைந்து கிடக்கின்றனர்.

கொரோனா ஒருவரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைத்ததுள்ளது, இந்த கொடிய வைரஸால் முடங்கிபோன தொழில்கள் என,  இவை அத்தனையும் பிரபல திரைப்பட நடிகர் விஜய்சேதுபதியை இந்த புகைப்படத்தில் பார்க்கும்போது தெரிகிறது.

ஆம், பிரபல புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் கைவண்ணமே இது. கரோனாவால் முடங்கிபோன சென்னையை, தன் புகைப்பட கருவி மூலம் பதிவுசெய்ய நினைத்தபோது, தமிழ் திரையுலகில் யதார்த்தமான நடிகர் என பெயரெடுத்த விஜய்சேதுபதி நினைவுக்கு வந்துள்ளார். இந்நேரத்தில் விஜய்சேதுபதியை தொடர்புகொண்டு பேசியுள்ளார் ராமச்சந்திரன்.

விஜயசேதுபதியிடம் பேசிய புகைப்பட கலைஞர் ராமச்சந்திரன், ஊரே முடங்கிபோயுள்ள இந்த நேரத்தில், உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் கோரிக்கைக்கு பிறகு அனுமதி கொடுத்த விஜய்சேதுபதியே, இந்த புகைப்படத்துக்கு சொந்தக்காரர்.

ஆம், தமிழ், தெலுங்கு திரையுலகையே தன் யதார்த்த நடிப்பாலும், எளிமையான பழக்கவழக்கத்தாலும் தன் உள்ளங்கையில் வைத்திருந்த விஜய்சேதுபதியை இந்த தோற்றத்தில் பார்க்கும்போது கொரோனாவும், ஊரடங்கும் எப்படிப்பட்டது என்று தெரிகிறது.

இது குறித்து பேசிய விஜய்சேதுபதி, இந்த ஊரடங்கால், வீடு சிறையாகும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை என்று கூறுகிறார். வீட்டில், தன் குடும்பத்தினருடன் இருந்திருந்தாலும் வீடு சிறைபோன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டதாக கூறுகிறார் விஜய்சேதுபதி.

திரைப்படங்களில் நாயகனாக பொலிவுடன் வலம் வந்து, ஆடிப்பாடி நடித்த விஜய்சேதுபதி, தற்போது இந்த 5 மாத ஊரடங்கால், முகத்தில் நீண்ட தாடியுடனும், அங்குமிங்கும் நரைத்த முடியுடனும் காட்சியளிக்கிறார்.

“புகைப்பட கலைஞர் ராமச்சந்திரனின் இந்த ஒரு புகைப்படமே ஒட்டுமொத்த கொரோனா எனும் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சாமானியனின் நிலை” என்பதற்கு சான்று.

Author: ADmiNIstRAtoR