எடப்பாடியிடம் ஸ்டாலின் – நாகரிக அரசியல் மலர்கிறதா?

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்தார் வெளியேறுகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதை ஏற்றுக்கொண்டு ட்விட்டர் மூலமே அவருக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இருந்தவரை மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களைப் பார்த்தாலே, சிரித்தாலே நடவடிக்கை பாயும் என்ற அச்ச நிலை அதிமுகவில் நிலவியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அந்த இறுக்கம் குறைந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்க உள்ள நிலையில் எடப்பாடி – ஸ்டாலின் ஆகிய இரு தலைவர்களும் இப்படி நாகரிக அரசியலை முன்னெடுத்துள்ளது அந்த திசையில் தமிழ்நாடு இன்னும் சற்று முன்னோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையை பலருக்கும் விளைவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் இது நேர்மறையாக விவாதிக்கப்படுகிறது.

~ நன்றி BBC Tamil

Author: ADmiNIstRAtoR