ஊடகவியலாளர்களை தரக்குறைவான வார்த்தைகள் சொல்லி அவதூறுகளைப் பரப்பி வரும் மாரிதாஸ், கிஷோர் கே சாமி, மற்றும் கல்யாணராமன் ஆகியோர்களின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) சார்பில் தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுத்தல்

சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சைக்குரிய காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் மாரிதாஸ் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து பல அவதூறு செய்திகளையும், அனைவரையும் ஒருமையில் பேசியும் யூ டியூப் களில் பேசி வரும் மாரிதாஸ் சமீக காலமாக ஊடகங்கள் மீது தன்னுடைய தாங்குதல்களைத் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ” புதிய தலைமுறை ” தொலைக்காட்சியில் உள்ள ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசியதைத் தொடர்ந்து தற்போது ” நியூஸ் 18 தமிழ்நாடு ” தொலைக்காட்சி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் மாரிதாஸ் பேசி இருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது.

அதேபோல கிஷோர் கே சாமி என்பவர் தொடர்ந்து ஆபாசமாக பத்திரிக்கையாளர்களை வர்ணிப்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்துகிறோம் !

பா.ஜ.க வை சேர்ந்த கல்யாணராமன் என்பவர் ” கருப்பர் கூட்டம் ” என்கிற யூ டியூப் சேனலை திட்டமிட்டு தாக்கும் எண்ணத்தில் ” இந்த கருப்பர் கூட்டம் ” என்கிற யூ டியூப் எங்கிருந்து இயங்குகிறது என்று மட்டும் பாருங்கள் ” என்று ஊடகவியலாளர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக அவருடைய குண்டர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அடையாளப் படுத்துகிறார்.

மாரிதாஸ், கிஷோர் கே சாமி, கல்யாணராமன் போன்ற மன நோயாளிகளுக்கு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் தைரியம் எங்கிருந்து வருகிறது ?

காவல்துறை இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் !

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (TUJ)
9444111494

Author: ADmiNIstRAtoR