வாவ் என்ன அழகு.. 2020 ஆஸ்கர் விருதை மிஞ்சிய நடிகைகளின் கவர்ச்சி விருந்து!

92வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த உடை அணிந்து, ஹாலிவுட் நடிகைகள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளனர்.

சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை என இரு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும், அவர் அணிந்து வந்த உடை ஆஸ்கர் விருதையே மறக்கடிக்கச் செய்துள்ளது. ரெட்கார்ப்பெட்டில் செம்ம செக்ஸியாக உடை அணிந்து வந்த ஸ்கார்லெட் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகிறது.

பிரை லார்சன் பிளாக் விடோ நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் கவர்ச்சியில் கலக்கினால், கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன் மட்டும் என்ன சும்மா விடுவாரா என்ன? அவரும் தனது பங்கிற்கு, பிங்க் நிற க்ளிட்டர் உடையில், தாராளமாக தனது முன்னழகை காட்டி உலகளவில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார்.

ரெனி ஸெல்வீகர் 92வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி படத்திற்காக நடிஅகி ரெனி ஸெல்வீகர் தட்டிச் சென்றார். வெள்ளை நிற மின்னும் உடையில், ஒன் ஸைட் ஓபன் விட்டு செம்ம செக்ஸியான உடை அணிந்து ரெனி ஸெல்வீகர் விருது விழாவுக்கு வருகை தந்து பலரது பார்வைகளை தன் பக்கம் திருப்பி இருந்தார்.

நடாலியா போர்ட்மேன் தோர், ஸ்டார் வார்ஸ், பிளாக் ஸ்வான் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய பிரபல ஹாலிவுட் நடிகை நடாலியா போர்ட்மேன், இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் கருப்பு நிற ஓவர் கோட்டை அணிந்து, உள்ளே தங்க நிறத்தில் கூடிய அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த ஆடை அணிந்து ரெட்கார்ப்பெட்டை அலங்கரித்து இருந்தார்.

மார்கட் ராபி ஒன்ஸ் அப்பான் டைம் இன் ஹாலிவுட் மற்றும் பாம்ஷெல் படங்களில் நடித்திருந்த நடிகை மார்கட் ராபி, இரு முறை ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பிடித்தும், இன்னும் ஆஸ்கர் விருதை வெல்ல முடியவில்லை. கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம கவர்ச்சியாக ஆஸ்கர் விருதுக்கு வந்திருந்த மார்கட் ராபி, தனது சிரிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Author: ADmiNIstRAtoR